17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நேரடி கடன் வழங்கும் விழா

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நேரடி கடன் வழங்கும் விழா

எழுதியவர்: mohan September 23, 2019, 6:57 pm

திருவண்ணாமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நேரடி கடன் வழங்கும் விழா கீழ்நாத்தூரில் நடைபெற்றது.திருவண்ணாமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள்நகர் ராஜன் தலைமையில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டது.9 சுய உதவி குழுக்களுக்கு 53 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் கடன் தொகையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் மற்றும் வங்கியின் செயலாளர் வாசுதேவன் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!