17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தகுதி தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் ஆசிரியைகள். மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தகுதி தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் ஆசிரியைகள். மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

எழுதியவர்: mohan September 23, 2019, 4:12 pm

திருவண்ணாமலையில் தனியார் பள்ளியில் 20 க்கும் மேற்பட்ட ஆசிரியைகள், கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஆண்டு, திறந்த பள்ளிக்கல்வி தேசிய நிறுவனத்தில் தகுதித்தேர்வு முதலாம் ஆண்டு எழுதி தேர்சிச் பெற்றுள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள தியாகி அண்ணாமலை பிள்ளை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு தகுதித்தேர்வு எழுதி முடித்த இவர்கள், இரண்டாம் ஆண்டிற்கான சேர்க்கை கட்டணத்தை, அந்தப் பள்ளியில் உள்ள கண்காணிப்பாளர் மோகன் சுந்தரம் என்பவரிடம் கொடுத்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் தலா 10 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக கண்காணிப்பாளரிடம் பணம் செலுத்தி உள்ளனர்.

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட கண்காணிப்பாளர் அந்த திறந்த பள்ளிக்கல்வி தேசிய நிறுவனத்தில் பணம் கட்டத் தவறியதால் நாங்கள் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தேர்வு எழுத முடியாத நிலை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று கூறியவர்கள், திங்கள் அன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த தேர்வை எழுத முடியவில்லை என்றால், நாங்கள் ஆசிரியர் பணியை தொடர முடியாது. எனவே இந்த தேர்வை எழுத எங்களுக்கு உதவிட வேண்டும் என்று கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!