திருவண்ணாமலை நகரம் 6 ஆவது வார்டில் வசிக்கும், முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டுமனை, வேறு ஒருவர் பெயருக்கு தவறாக பட்டா மற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை சரிசெய்து தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்துதர வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் முதல், சர்வேயர் வரை பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வாலிபர் முருகன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில், திங்கள் 23.09.19 அன்று, தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற கோரி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தனி நபராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
தவறான பட்டா மாற்றத்தால் மன உளைச்சல். வாலிபர் தனி நபராக உண்ணாவிரதம்
எழுதியவர்: mohan September 23, 2019, 4:05 pm




You must be logged in to post a comment.