18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான்

எழுதியவர்: mohan September 22, 2019, 3:07 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் போஷன் அபியான் ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம், தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி வளாகத்தில்   நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு, மினி மாரத்தான் ஓட்டம் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் துணைவியார் அத்தியாஷா நந்தூரி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கீதாராணி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.மினி மாரத்தான் போட்டியானது வ.உ.சி கல்லூரி வளாகத்தில் துவங்கி, தருவை விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!