17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கல்வி » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மேலாண்மைத் துறை சார்பாக கருத்துப்பட்டறை..

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மேலாண்மைத் துறை சார்பாக கருத்துப்பட்டறை..

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2017, 6:33 pm

கீழக்கரை இன்று (12-04-2017) முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மேலாண்மைத் துறை சார்பாக சமூக அறிவியல் ஆராய்ச்சியில் புள்ளியியல் பயன்பாடு பற்றிய கருத்துப்பட்டறை கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும் கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கல்லூரி மேலாண்மைத்துறை தலைவர் அப்பாஸ் மாலிக் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரி மேலாண்மை துறை தலைவர் முனைவர் செந்தில் கலந்து கொண்டு புள்ளியியல் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட புள்ளியியல் சமூக அறிவியல் ஆராய்ச்சியில் புள்ளியியல் பயன்பாடு குறித்து விளக்கம் அளித்தார். மேலும் அவை துள்ளியமாக இருப்பது, விரைந்து முடிவெடுத்தல், எளிதாக பல்வேறு காரணிகளை ஆராய்வதற்கு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியில் பெரும்பங்கு வகிப்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் இறுதியாக கல்லூரி மேலாண்மைத்துறை துணை பேராசிரியர் சாகுல் ஹமீது நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாண்மைத்துறை துணை பேராசிரியர்கள் குமார், புரோஸ்கான், நைமூதீன், சங்கர், சாலினி, சந்தான ஜெயலட்சுமி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!