தமிழகத்தில் மழை காலம் தொடங்கும் நேரம் எல்லாம் டெங்கு கொசுவின் அட்டகாசமும் தொடங்கிவிடும். இப்பிரச்சினைக்கு சுகாதார சீர் கேட்டை நிரந்தரமாக சரி செய்வது மூலமே தீர்வு காண முடியும், ஆனால் அதற்கு வழி இல்லாத நிலையே தொடர்ந்து வருகிறது.
இந்த வருடமும் கமுதி ஒன்றிய பகுதியில் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் டெங்கு கொசு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண கோரி மக்கள் பாதை இயக்கம் சார்பாக அரசு நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குளிமுத்துநாடார் தெரு மற்றும் இன்னும் அருகில் உள்ள பகுதியில் தான் டெங்கு பரவியது என்பது குறிப்பிடத்தக்கது







You must be logged in to post a comment.