வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மாநகராட்சி சார்பாக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அதில் 8 கடைகள் கட்டப்பட்டுவாடகைவிடப்பட்டுள்ளது. கடை வாடகை எடுத்தவர்கள் பயணிகளை அங்கு நிற்கவிடாமல் துரத்தி அடித்து வந்தனர். தங்கள் கடைக்கு முன் 6 அடி வரை வைக்க
வேண்டும் ஆனால் 20 அடி வரை வைத்து வியபாரம் செய்து வந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு புகார் கூறப்பட்டது. காட்பாடி டிஎஸ்பி துரைப்பாண்டி நேரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ரினார். காவல் ஆய்வாளர் புகழ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாலாஜி உதவி ஆய்வாளர்கன்னியப்பன் மற்றும் போலீசார் அதிரடியாக செயல்பட்டனர். இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது
காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள மாநகராட்சி கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பை டிஎஸ்பி துரைப்பாண்டி அதிரடியாக அகற்றினார்
எழுதியவர்: mohan September 20, 2019, 3:37 pm




You must be logged in to post a comment.