18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆரணியில் 70 வயது ஆன முதியவரை 3 கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி வழிப்பறி செய்த சம்பவம்.2கொள்ளையர்கள் கைது

ஆரணியில் 70 வயது ஆன முதியவரை 3 கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி வழிப்பறி செய்த சம்பவம்.2கொள்ளையர்கள் கைது

எழுதியவர்: mohan September 20, 2019, 1:32 pm

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் சத்தியமூர்த்தி சாலையில் கடந்த 15.09.19 அன்று திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தன்னுடைய உறவினரின் திருமண நிகழ்ச்சிகாக வந்துள்ளார். அப்போது முதியவர் ஆறுமுகத்தை இருசக்கர வாகனத்தில் 3பேர் கொண்ட வழிப்பறி கொள்ளையர்கள் பின்தொடர்ந்து வந்து முதியவரை கடுமையாக தாக்கி அவரிடம் பணம், செல்போன், செயின், ஆகியவற்றை கொள்ளையடித்தனர். அதனை தொடர்ந்து ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில், காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிபடை அமைத்து 3 கொள்ளையர்களை தீவிரமாக தேடினார்கள்.

இதில் ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மண்டை (எ) மணிகண்டன் 26), ஆரணி அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மணி (எ) மணிகண்டன் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மகாலஷ்மி முன்பு ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஆரணி அடுத்த அடையபுலம் கிராமத்தை சேர்ந்த தலைமறைவாக உள்ள சூரியா (24) என்பவனை வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். மண்டை (எ) மணிகண்டன், மணி (எ) மணிகண்டன் ஆகிய 2பேர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!