சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர். பாலாஜி தலைமையிலான போலீசார் , நான்கு வழி சாலை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது , அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரையும், உடன் வந்த பெண்ணையும் விசாரணை செய்த போது சோழவந்தான் தெற்கு ரதவீதியில் உள்ள விஜய்ஆனந்த், பழனிச்சாமி ஆகியோரது வீடுகளில் திருடியதை ஒப்புக்கொண்டனர். நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார்(35) இவருடைய தாய் முனியம்மாள் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து , போலீசார் கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.