17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே சிக்கமாரண்டஅள்ளியில் கால்வாய் தூர்வாராததால் நோய்கள் பரவும் அபாயம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா !

பாலக்கோடு அருகே சிக்கமாரண்டஅள்ளியில் கால்வாய் தூர்வாராததால் நோய்கள் பரவும் அபாயம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா !

எழுதியவர்: mohan September 20, 2019, 12:38 pm

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கமாரண்டஹள்ளி ஊராட்சி கிராம பகுதிகளில் உள்ள தெருக்களில்  சாக்கடை கால்வாய்களில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பைகளை அகற்றாததால் கழிவுநீர் பலமாதங்களாக தேங்கி கிடக்கிறது. இதில் தூர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தியாகி பல்வேறு நோய் தாக்குதல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் சரியான கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் இருப்பதால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. மேலும் மழை காலங்களில் தெருவில் வரும் மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வரும் மழைநீரும் மற்றும் கழிவு நீர் இணைந்து தேங்குவதால் சில நாட்களிலே துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி கொசு உற்பத்தியாகி பொதுமக்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, பேதி, மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை அடைந்து வருகின்றனர். மேலும் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் கழிவுநீர் கால்வாயில் அடைத்து கழிவுநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

கழிவு நீர் பாதிப்பு குறித்து பலமுறை ஊராட்சி செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்த கூட நிதி இல்லை என்று அலச்சியமாக பதில் அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கழிவு நீரை அகற்றி கொசு தொல்லையில் இருந்து பொதுமக்கள் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!