18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை-தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

கீழக்கரை-தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

எழுதியவர்: ஆசிரியர் September 19, 2019, 11:39 pm

கீழக்கரை ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மாவட்ட தீயணைப்பு துறை இணைந்து கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் 19 9 2019 வியாழன் மதியம் இரண்டு முப்பது மணி அளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுமையா தாவூது தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம் முன்னிலையில் தீ தடுப்பு ஆய்வாளர் தீ தடுப்பு எச்சரிக்கை குறித்து விளக்கினார். கீழக்கரை தாலுகா செயலாளரும் முன்னாள் ரோட்டரி தலைவருமாகிய சுந்தரம் பயிற்சியின் நோக்கம் பற்றி பேசினார்.

கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் முனிய சங்கர்,  செயலாளர் ஹஸன் தீ தடுப்பு துறை அதிகாரிகள் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளும் கலந்து கொண்டார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!