18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

எழுதியவர்: mohan September 19, 2019, 2:50 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் “நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை “முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.முகாமிற்கு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் தலைமை தாங்கினார்.

நிலைய மருத்துவர்ஆசியா முன்னிலை வகுத்தார். தீயணைப்பு துறையினர் சார்பில், பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி, பேரிடர் காலங்கள், தீ பற்றிய இடங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தங்களையும், மற்றவர்களையும் எவ்வாறு காப்பது என்பது குறித்த செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மற்றும் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் .ஜெயப் பிரிந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தீ தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவமனை செவிலியர்கள், மத்துவமனை ஊழியர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், நோயாளி உறவினர்கள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!