திட்டங்குளம், வெம்பூர் பேருந்துகள் நின்று நின்றுச் செல்ல தூத்துக்குடி M.P. கனிமொழி போக்குவரத்து மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களவை தி.மு.க. துணைத் தலைவருமான கனிமொழி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி
தாலுகாவைச் சார்ந்த திட்டங்குளம், எட்டையாபுரம் தாலுகாவைச் சார்ந்த வெம்பூர் மற்றும் தெற்கு கோனார் கோட்டை ஆகிய கிராம மக்கள் பேருந்து வசதி கேட்டு அளித்த மனுக்களின் பெயரில், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதிட்டங்குளம் வழியாகச் செல்லும் அனைத்து தூத்துக்குடி – கோவில்பட்டி பேருந்துகளையும்,திட்டங்குளத்தில் நின்றுச் செல்லவும்,வெம்பூர் வழியாகச் செல்லும் அனைத்து தூத்துக்குடி – மதுரை பேருந்துகளையும், வெம்பூரில் நின்றுச் செல்லவும்,தெற்கு கோனார் கோட்டைக்குப் போதிய பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர வழிவகைச் செய்யும்படியும் போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளரிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி எம்.பி. கனிமொழி போக்குவரத்துமேலாளருக்கு கடிதம்
எழுதியவர்: mohan September 19, 2019, 2:10 pm




You must be logged in to post a comment.