கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் கீழக்கரை மறவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் முனியசங்கர் தலைமை வகித்ததார். பட்டய தலைவர் அலாவுதீன் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செயலாளர் ஹஸன், பொருளாளர் செல்வ நாராயணன், முன்னாள் தலைவர்கள் சுந்தரம், டாக்டர் ராசிக்தீன் உள்ளிட்ட ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர், உதவி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.







You must be logged in to post a comment.