நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே ராட்டினத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக பலியானார்.திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே சிறுமளஞ்சி கோயில் உள்ளது. இந்த கோவில் கொடை விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த ராட்டினத்தை அகற்றும் பொழுது அதில் பணியாற்றிய பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் கீழே விழுந்து பலியானார் . இது குறித்த தகவல் அறிந்தத ஏர்வாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.