17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுதியவர்: mohan September 19, 2019, 10:45 am

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை  சாா்பில்  சாணார்பட்டி காவல் நிலையம் முன்பு புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுது கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும், மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்பொழுது சீட் பெல்ட் அணிந்து செல்லவேண்டும் என்றும் சாலை விதிகளை மதித்து செல்லவேண்டும் என்றும் சாலை பாதுகாப்பு விதிகளை மதித்து நடந்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் அறிவுரைகளை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் தலைக்கவசம் இல்லாத 20 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சாணார்பட்டி காவல் ஆய்வாளர் ராஜமௌலி, சார்பு ஆய்வாளர்கள் காதர்மைதீன், ரவி சார்பு ஆய்வாளர்(பயிற்சி) வாசுதேவன் தனிப்பிரிவு காவலர் கார்த்திக்  நிருபர்கள் மோகன்கணேஷ், புஷ்பராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!