இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள்,பிலால்கள் மற்றும்
இதர பணியாளர்கள் தர்காக்கள், அடக்கஸ்தலங்கள்,தைகாக்கள் மற்றும் முஸ்லிம் அநாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள்,உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய விடுபட்டவர்களை புதிய உறுப்பினர்களாக பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.ஏற்கனவே உலமா நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் நலவாரிய அட்டையை புதுப்பித்துக் கொள்ளவும் நலவாரியத்தில் பணியாற்றி 60 வயதை கடந்த உலமா நலவாரிய உறுப்பினர் ஒய்வூதியம் பெற நலவாரிய அட்டையுடன் வந்து நேரிடையாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்ய தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் அறிவிப்பு…
எழுதியவர்: mohan September 19, 2019, 9:40 am




You must be logged in to post a comment.