திருவாடானை அருகே நடந்த மக்கள் திட்ட முகாமில் இளைஞர் ஒருவர் தன்னை திருவாடானை தாசில்தாராக நியமிக்கக் கோரி மனுக் கொடுத்தார். இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மங்களக்குடியில் மக்கள் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் வீர்ராகவராவ் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் 250க்கும் மேற்பட்ட மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இதில் கட்டவளாகம் ஊராட்சி கீழ்குடியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் வினோகர் 32, தன்னை திருவாடானை தாசில்தாராக ஆறு மாத காலம் நியமிக்கக் கோரி மனு கொடுத்தார்.
இது சம்பந்தமாக வினோகர் கூறுகையில், என் தந்தை பெயரில் இருந்த பட்டா பதிவுகளை மாற்றம் செய்ய / திருவாடானை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாச்சியரிடம் மனு கொடுத்து எவ்வித நடவடிக்கை இல்லை. ராமநாதபுரம் மாவட்ட அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெருகி விட்டதால் . சான்றிதழ்கள் பெற வரும் அலுவலகம் செல்னும் ஏழைகளை அலுவலக ஊழியர்கள் திட்டி அனுப்புகின்றனர். சான்றிதழ்கள் பெற அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் தொகை லஞ்சம் கேட்பதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாடானை பகுதி அரசு அலுவலர்களின் ஊழலை கட்டுப்படுத்த திருவாடானை தாசில்தராக ஆறு மாதம் நியமித்தால் ஆறு மாதத்தில் ஊழலை ஒழித்து ஏழை மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வேன் . எனது கோரிக்கை மனுவின் படி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதே போல் ஆர்.எஸ்.மங்களம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். விவசாயக் கூலியாக வேலைபார்த்துவந்தார். கடந்த ஆண்டு ஜூலை 5ல் இடி தாக்கி தனசேகரன் பலியானார். அவரது மனைவி அருள்மேரி, அரசு நிவாரணம் பெற அருள்மேரி திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மனு செய்தார். தனசேகரன் இறப்புக்கான சான்று ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினர். இதற்கிடையில் ஆர்.எஸ்.மங்கலம் தனி தாலுகா 2018 ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. இதனால் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் தனசேகரனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, இறப்பு,, வாரிசு, விதவைச் சான்று ஆகியவற்றின் அசல் சான்றுகளை அருள்மேரி சமர்ப்பித்தார். சான்றுகளை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், நிவாரணத் தொகை வழங்கவில்லை. இதனால் அருள்மேரி தாலுகா அலுவலகத்திற்கு பலமுறை சென்று முறையிட்டும் அவரது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய பதிலால் அருள் மேரி விரக்தி அடைந்தார்.
இராமநாதபுரத்தில் 16. 9.19ல் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க நடந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் அருள்மேரி கோரிக்கை மனு கொடுத்தார். அதை வாங்கிய ஆட்சியர், சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை அழைத்தார். வட்டாட்சியர் சார்பில் அங்கு வந்த துணை வட்டாட்சியரிடம் அருள்மேரியின் மனு குறித்து ஆட்சியர் விசாரித்தார். ஆனால், அப்பெண் அதிகாரியோ தாமதத்திற்கான காரணம் குறித்து விளக்கமளிக்காமல், அருள்மேரியை அந்த இடத்தில் இருந்து அழைத்துச் செல்வதிலேயே குறியாக இருந்தார்.
இதனால் அப் பெண் அதிகாரியின் பிடியிலிருந்து தனது கைகளை விடுவித்துக்கொண்டு, அழுதபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் அருள்மேரி. இதைக் கண்ட மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், இடி விழுந்து இறந்தவருக்கு நிவாரணம் வழங்க உரிய தகுதிகள் இருந்தும் அதை வழங்காமல் ஓராண்டுக்கு மேலாக தாமதம் செய்து வரும் துணை வட்டாட்சியரின் செயலை கடுமையாக கண்டித்தார். மேலும், மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்னைகளை வட்டார அளவிலேயே தீர்க்கப்பட்டால், இங்கு மனு கொடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், அதிகாரிகள் அதில் அக்கறை காட்டுவதில்லை. இனிமேலும் அப்படி இருக்காதீர்கள். தொடர்ந்து அவ்வாறு இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை பாயும்” என எச்சரித்தார்.
மேலும், அருள்மேரிக்கு நிவாரணத் தொகை கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு, அடுத்த வாரம் தனது முன்னிலையில் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இவ்விரு சம்பவங்கள் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டார அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.







You must be logged in to post a comment.