18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அரசு கலை கல்லூரி நுண்கலை விழா

இராமநாதபுரம் அரசு கலை கல்லூரி நுண்கலை விழா

எழுதியவர்: mohan September 18, 2019, 7:11 pm

இராமநாதபுரம் அரசு மகளிர் கலை கல்லூரி மாணவியர் பேரவை தொடக்க விழா மற்றும் நுண்கலை விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வர் கீதா மாணிக்க நாச்சியார் தலைமை வகித்தார். மாணவியர் பேரவை பொறுப்பாளர் வணிகவியல் பேராசிரியை ஜெனட் ஒய். செல்வியா வரவேற்றார். பேன்ஸி உடை அலங்கார போட்டியில் பி.எஸ்சி வேதியியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஏ.கவுசல்யா, எம்.எஸ்சி., கணிதம் இரண்டாம் ஆண்டு மாணவி எஸ்.விக்னேஸ்வரி, பி.எஸ்சி., மனையியல் மூன்றாம் ஆண்டு மாணவி பி.ஐஸ்வர்யா ஆகியோர் முதல் மூன்றிடம் பிடித்தனர். இராமநாதபுரம் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் யு.விமலா பரிசு வழங்கி கவுரவித்தார்.

அழகப்பா பல்கலை., அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவிகள் எஸ்.மதுமிதா ( கம்ப்யூட்டர் சயின்ஸ்), பி.மதுமிதா (மனையியல் ), ஆர்.சங்கீதா (வணிகவியல் ) ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நுண்கலை விழா போட்டிகளில் . கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவியர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். வேதியியல் துறை தலைவர் எம்.முத்தாலேஸ்வரி, மின்னணுவியல் துறை தலைவர் ஜி.ராஜேஷ் கண்ணா , தமிழ் துறை விரிவுரையாளர் எஸ்.அமுதா ஆகியோர் போட்டி நடுவர்களாக பணியாற்றினர். நுண்கலை பிரிவு பொறுப்பாசிரியை கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசிரியை ஜாஸ்மின் குணசுந்தரி நன்றி கூறினார். மாணவியர் பேரவை தலைவி துர்கா (பி.ஏ., தமிழ் மூன்றாம் ஆண்டு) , செயலாளர் சித்ரா (பி.எஸ்சி., வேதியியல் மூன்றாம் ஆண்டு), இணை செயலாளர் தனலட்சுமி (பி.காம்., மூன்றாம் ஆண்டு), விளையாட்டு பிரிவு செயலாளர் வினிதா (பி.காம்., இரண்டாம் ஆண்டு), நுண் கலை பிரிவு செயலாளர் லட்சுமி பிரியா (எம்.எஸ்சி., இரண்டாம் ஆண்டு), ஒலி காட்சி பிரிவு செயலாளர் கார்னீஸ்வரி (பி.எஸ்சி., மின்னணுவியல் இரண்டாம் ஆண்டு) உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகள் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!