சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பெரம்பலூர் மாவட்டம் பெரிய வெண்மணி கிராமத்தில் சாலை வசதி சரிவர இல்லாமல்,ஒவ்வொரு மழையின் போதும் தெருக்களில்நடந்து செல்லவும்,வாகனங்களில் சென்றுவருவதற்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் அவல நிலை காணப்படுகிறது.இது குறித்து பலமுறை பஞ்சாயத்தும் , ஒன்றிய அலுவலகம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வெளிப் பகுதியில் இருந்து பெரிய வெண்மணி கிராமத்துக்கு வருபவர்கள் இது என்ன ஊரு , தெருவில் நடக்க முடியல ? வாகனம் ஓட்ட முடியல ? நீங்க எல்லாம் எப்படி வாழ்கிறீர்கள் என்று கேவலமாக கேட்கும் நிலை உள்ளது.இந்த கிராமத்துக்கு தார்சாலை அல்லது சிமெண்ட் சாலை அல்லது வண்ண கல் சாலை எப்பொழுது அமைக்கப்படும் என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
மேலும் இந்த அவலத்தை போக்க பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்பாதை அமைப்பின் சார்பில் சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் மற்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.