திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கோட்டூர் ஊராட்சியில் உள்ள பெரியார் சமத்துவபுரத்தில் பெரியாரின் 141 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பெரியார் சிலைக்கு திராவிட கழக ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.. அதனைத்தொடர்ந்து நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள அங்கன்வாடி மையத்திற்கு திராவிட கழகத்தினர் சென்று அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.. இந்நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் போது ராஜன் . விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரக் கழகச் செயலாளர் திருப்பதி, மக்கள் விடுதலை கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கண்ணன், ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் சக்தி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டையில் பெரியார் பிறந்த தினவிழா
எழுதியவர்: mohan September 18, 2019, 2:30 pm




You must be logged in to post a comment.