திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி , நாட்டார் பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி மகன் தினேஷ் குமார் 21. இவர் சிவில் இன்ஜினியரிங் முடித்து உள்ளார்..இந்நிலையில் கிராமத்தின் அருகே உள்ள எ .ஆவாரம்பட்டி சேர்ந்த பிரசாந்த் மகள் சர்மிளா தேவி 19. தற்போது நிலக்கோட்டை அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது தோழியை பார்ப்பதற்கு நாட்டார் பட்டிக்கு அடிக்கடி வந்ததாக கூறப்படுகிறது.அப்போது தினேஷ்குமார், சர்மிளா தேவியும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .இவா்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து வந்தனர். இதனை அறிந்த பெண்வீட்டார் வேறு இடத்தில் மாப்பிள்ளை பாா்த்ததாக கூறப்படுகிறது..
இதனால் காதல் ஜோடி இருவரும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி பழனியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.. இதுகுறித்து சர்மிளா தேவி வீட்டார் விளாம்பட்டி போலீசிடம் ஒரு புகார் கொடுத்தனர்.. விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் விசாரித்து வந்த நிலையில் காதல் ஜோடி இருவரும் நிலக்கோட்டை வக்கில் கோகுல்நாத் தலைமைையில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.. நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன் உத்தரவுபடி நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லதா இரு வீட்டாரையும் அழைத்து பேசினார்..இதற்கு பெண் வீட்டார் மறுக்கவே மாப்பிள்ளை தினேஷ்குமார் வீட்டார் ஏற்றுக்கொண்டதால் காதல் ஜோடி இருவரையும் தினேஷ் வீட்டார் உடன் அனுப்பி வைக்கப்பட்டனர் . இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
.
நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
எழுதியவர்: mohan September 18, 2019, 2:21 pm




You must be logged in to post a comment.