மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ளது அல்லிகுண்டம் கிராமம்.இக்கிராமத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் 100 நாள் எனப்படும் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் தங்களுக்கு பணியிடம் ஒதுக்க கோரி போராடி வருகின்றனர்.கடந்த மாதம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய
அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அதிகாரிகள் விரைவில் பணியிடம் ஓதுக்கப்படும் எனக்கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.இந்நிலையில் இதுவரை வேலை வழங்காததால் மீண்டும் அல்லிகுண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவமறிந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.15 நாட்களுக்குள் பணியிடம் வழங்கப்படும் எனக்கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.
100 நாள் வேலைத்திட்டத்தில் பணியிடம் ஒதுக்க கோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எழுதியவர்: mohan September 18, 2019, 2:11 pm




You must be logged in to post a comment.