தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சோத்துப் பாறை அணை சாலையில் தென்கரை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய சோதனைச் சாவடியை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் திறந்து வைத்தார்.உடன் பெரியகுளம் சரக காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தென்கரை காவல் நிலைய ஆய்வாளர்கள் முத்துமணி,.சுகுமாறன், மற்றும் தென்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள், காவல் நிலைய ஆளிநர்கள் மற்றும் தென்கரை விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தென்கரை விவசாயிகள் சங்க தலைவர் முருகன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்




You must be logged in to post a comment.