17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » ப்ளஸ் 2 மாணவர்களுக்கான வெற்றி நமதே வழிகாட்டி கருத்தரங்கம் தொடங்கியது..

ப்ளஸ் 2 மாணவர்களுக்கான வெற்றி நமதே வழிகாட்டி கருத்தரங்கம் தொடங்கியது..

எழுதியவர்: ஆசிரியர் January 4, 2017, 2:22 pm
கீழக்கரையில் இன்று பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான  “வெற்றி நமதே” நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் மிகச் சிறப்பான முறையில் காலை 10.30 மணியளவில் தொடங்கியது.    

இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் SM.  யூசுப் தலைமை தாங்கினார்.  இயக்குனர் PRLA  ஹாமீது இபுராஹிம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் E. ரஜபுதீன்  வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஹமீதியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவாஹிர் ஃபாரூக் திருவரங்கம் புனித தல மேல்நிலைப் பள்ளியின் முதுநிலை கணித ஆசிரியர் M லாசர் காடரந்தங்குடி மேல்நிலைப்பள்ளி முதுநிலை இயற்பியல் ஆசிரியர் B வேல்முருகன் கீழத்தூவல் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆரோக்கியம் பன்னீர் செல்வம் மற்றும் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் RD நெல்சன் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மேல் நிலைக் கல்வி பற்றிய ஆலோசனை மற்றம் விழிப்புணர்வு சொற்பொழிpவு ஆற்றினார்கள்.

கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி டீன் டாக்டர் J முகம்மது ஜகுபர் மற்றும் டாக்டர் J அப்பாஸ் முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் இராமநாதபுர மாவட்டத்தைச் சார்ந்த 1200கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியாக முதுகலை வணிகயவியல்  துறைத் தலைவர் டாக்டர் P பாலக்கிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்;ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக வேதியல் துறைத் தலைவர் A அப்துல் சர்தார் நுண்ணுயிரியல் துறைத்த தலைவர் டாக்டர் M ஆனந்த் மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் RD  நெல்சன் டேனியல் ஆகியோர் செய்திருந்தனர்.  இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சி நாளையும் பிற துறைசார்ந்த வல்லுனர்களுடன் தொடரும் என்று அறியப்படுகிறது.

   
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!