17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாளுக்கு நாள் பெருகும் ஷேர் ஆட்டோக்கள் அட்டகாசம். தொடர் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்.

நாளுக்கு நாள் பெருகும் ஷேர் ஆட்டோக்கள் அட்டகாசம். தொடர் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்.

எழுதியவர்: mohan September 18, 2019, 1:44 pm

மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் சாலையில் போட்டி போட்டுக் கொண்டு வந்த ஷேர் ஆட்டோ திருப்பரங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே திசையில் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் தனக்கன்குளம் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மனைவி மற்றும் பிறந்து 45 நாட்கள் ஆன கவிஸவரன் குழந்தை மீது ஆட்டோ கவிழ்ந்ததில் குழந்தையின் விலா எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில்கொண்டு செல்லப்பட்டுள்ளது.  மது போதையில் மற்றும் கஞ்சா போதையிலும் இயக்கும் ஆட்டோக்கள் உரிய அனுமதியும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல்  இல்லாமலும் இயக்கப்படுகிறது .அதிக அளவில் ஆட்களை ஏற்றிச் செல்வதால் இது போன்ற விபத்துகள் தினசரி மதுரை மாநகரில் நடைபெறுகிறது .உரிய அனுமதி இல்லாமல் ஷேர் ஆட்டோக்களை வெறும் அபராதம் விதிக்காமல் ஆட்டோக்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!