18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆரணி அருகே டேங்கர் லாரியில் கடத்தி வரப்பட்ட 25ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல். 4பேர் தப்பியோட்டம்.

ஆரணி அருகே டேங்கர் லாரியில் கடத்தி வரப்பட்ட 25ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல். 4பேர் தப்பியோட்டம்.

எழுதியவர்: mohan September 18, 2019, 1:26 pm

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் 25ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் . 4 பேர் தப்பியோடிய சம்பவம்.பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.ஆரணி – சேத்துப்பட்டு நெடுஞ்சாலை நெசல் கிராமம் அருகில் விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் ஆரணி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது டேங்கர் லாரி நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. அதனை பின்தொடர்ந்து சென்றபோது நெசல் கிராமத்தில் ஏரிப்பகுதியில் சேற்றில் லாரி சிக்கிக்கொண்டது. அப்போது அங்கு விழுப்புரம் மத்திய புலனாய்வுத்துறையினர் சென்றபோது 500 கேன்களில் இருந்த 25000 லிட்டர் எரிசாராயத்தையும் கர்னாடக மாநில பதிவெண் கொண்ட லாரி உள்ளிட்டா 2 லாரிகள் மற்றும் நான்கு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அங்கிருந்த நான்குபேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.பபறிமுதல் செய்த 25000 லிடர் எரிசாராயத்தை போளூர் கலால் போலிஸ் அலுவைலகத்தில் ஒப்படைத்தனர்.இதன் மதிப்பு 1கோடியாகும்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!