18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் குத்திக் கொலை

இராமநாதபுரம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் குத்திக் கொலை

எழுதியவர்: mohan September 18, 2019, 12:53 pm

இராமநாதபுரம் அருகே எல்.கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியன்  61.ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். கொட்டகை பகுதியை சேர்ந்த கந்தவேல் மகன் மதன்குமார், 27. கண்ணந்தை பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் இருவரும் கலந்து கொண்டனர். அங்கு இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது முனியன் விரலில் அணிந்து இருந்த மோதிரத்தை மதன்குமார் கழற்ற முயன்றார். இதனால் மதன்குமாரை, முனியன் கண்டித்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட து. அப்போது அருகில் கிடந்த கடப்பாரையால், முனியனை மதன்குமார் குத்தினார். இதில் முத்துராக்கு பரிதாபமாக பலியானார் .இச் சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீசார் மதனகுமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!