மதுரை மாநகர காவல் துறையின் குற்றச்செயல்களை தடுக்க மதுரை நகர் சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பழங்காநத்தம் அக்ரஹாரம் மற்றும் பசும்பொன் நகர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் இணைந்து பல்வேறு பகுதிகளில் சிசிடிவி
கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் குற்றச்செயல்கள் குறைக்கப்படும்.. மேலும் குற்றச் செயல்கள் நடைபெறும் பகுதிகளில் எளிதாக குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என தகவல் தெரிவித்தார். இதுபோன்று பல்வேறு பகுதிகளிலும் சிசி டிவி கேமரா பொருத்த உள்ள இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.