18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோட்டில் நடமாடும் தக்காளி பதப்படுத்தும் வாகனத்தை அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார்

பாலக்கோட்டில் நடமாடும் தக்காளி பதப்படுத்தும் வாகனத்தை அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார்

எழுதியவர்: mohan September 18, 2019, 12:31 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தக்காளி பதப்படுத்படுத்தும் குளிரூட்டும் நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.பாலக்கோடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை உரிய விலை கிடைக்காத காலங்களில்  தக்காளி உள்ளிட்ட பழங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விவசாயி மற்றும் விவசாயி குழுக்கள் தயாரிக்க நவீன இயந்திரங்கள் அடங்கிய 2 கோடி மதிப்பிலான நடமாடும் 5 தக்காளி  வாகனத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார் . மாவட்டத்திற்க்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்தை நேரடியாக விவசாயிகளின் தக்காளி  பண்னைக்கே எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் உள்ள பதப்படுத்தும் இயந்திரத்தின் மூலம் தக்காளியில் இருந்து பூரி, ஜாம் , ஜெல்லி, குளிர்பானம், கெச்சப்பு, ஊறுகாய், சட்னி,பேஸ்ட்,தக்காளி சாதா பவுடர் உள்ளிட்ட பல்வேறு வகையான மதிப்பு கூட்டு பொருட்கள் தக்காளியில் இருந்து செய்யப்படுகிறது தக்காளியை மட்டுமல்லாது மா, பப்பாளி, கொய்யா,  திராட்சை பழங்களை பதப்படுத்தி அதன் சாறுகளை கொண்டு மதிப்பூ கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் அன்பழகன் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் , சார் ஆட்சியர் சிவன் அருள் , தாசில்தார் வெங்கடேசன் பாலக்கோடு முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சங்கர் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!