சமீபத்தில் சென்னையில் சுபஸ்ரீ என்கின்ற பெண் பிளக்ஸ் போர்டு கீழே விழுந்ததில் லாரி மோதி விபத்தில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.இப்பொழுது மதுரையிலுள்ள பல பயணிகள் நிழற்குடையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் சில விளம்பர பலகைகள் கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால் பேருந்துக்காக காத்துக்கொண்டிருக்கும் பயணிகள் மேலே விழும் அபாயமும் உள்ளது. இதை மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இந்த விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.