17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை திருமணம் செய்து வைக்கக் கோரி 75 வயது முதியவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை திருமணம் செய்து வைக்கக் கோரி 75 வயது முதியவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

எழுதியவர்: mohan September 18, 2019, 10:37 am

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, சமீபத்தில் நடந்த உலக சாம்பியன் தொடரில் தங்க பதக்கம் வென்று சாதனை புரிந்தார். பேட்மிண்டன் விளையாட்டில் பல்வேறு சாதனை புரிந்த பி.வி.சிந்து, இச்சாதனைக்கு பின் உலகெங்கும் மக்கள் மத்தியில் பேசப்பட்டார். இவருக்கு எண்ணிலடங்காத ரசிகர்கள் விரிந்தது. இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே விரதக்குளத்தைச் சேர்ந்த விவசாயி மலைச்சாமி, பி.வி.சிந்து புகைப்படம் ஒட்டிய மனுவை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் அளித்தார். அம்மனுவில், விளையாட்டுத்துறையில் தீராத ஆர்வம் கொண்ட தான், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலித்து வருவதாக கூறினார். பி.வி.சிந்துவை திருமணம் செய்தே தீருவேன் என உறுதியாக கூறும் இவர், சிந்து எங்கிருந்தாலும் விடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!