17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செவிலியரிடம் அத்துமீறிய வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி செவிலியர்கள் மனு

செவிலியரிடம் அத்துமீறிய வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி செவிலியர்கள் மனு

எழுதியவர்: mohan September 18, 2019, 10:33 am

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியரிடம், செப். 12 ஆம் தேதி நள்ளிரவு 11:15 மணியளவில், அதே ஊரைச் சேர்ந்த பிரசாத்(19), மருத்துவ உதவி கேட்பதுபோல் உள்ளே சென்றார். குடி போதையில் இருந்த அவர் செவிலியரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். இதில் காயமடைந்த செவிலியர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பிரசாத் மீது 8 பிரிவுகளின் கீழ் திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்நிலையில் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்க சுகாதார மாவட்டத் தலைவர்கள் ஆர்.விமலா (ராமநாதபுரம்), எஸ்.சியா(பரமக்குடி), சவுந்தரவள்ளி (சிவகங்கை) உள்பட 60க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் குமரகுருபரன் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். ராமநாதபுரம் சுகாதார மாவட்ட தலைவர் விமலா கூறுகையில், சம்பவம் நடந்து 5 நாட்களாகியும் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபர் கைது செய்யப்படவில்லை. அவரை உடனே கைது செய்ய வேண்டும்.பாதுகாப்பான சுகாதார நிலையங்கள், குடியிருப்புகளை அரசு கட்டித்தர வேண்டும் என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!