17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நகராட்சி » பிரச்சனை » நீண்ட போராட்டதிற்கு பிறகு வள்ளல் சீதக்காதி சாலை பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்..

நீண்ட போராட்டதிற்கு பிறகு வள்ளல் சீதக்காதி சாலை பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் April 11, 2017, 5:36 pm

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் பல மின் கம்பங்கள் பழுதடைந்து எந்நேரமும் விழக்கூடிய அபாயகரமான சூழ்நிலையில் இருந்தது.  இது சம்பந்தமாக கீழக்கரையில் உள்ள பல சமூக அமைப்புகளும்,  ஆர்வலர்களும் மின் நிர்வாத்திற்கும் முதல் அமைச்சர் தனி பிரிவுக்கும் தொடர்ச்சியான புகார் மனுக்களை அனுப்பிய வண்ணம் இருந்தனர்.

அத்தனைப் போராட்டத்திற்கும் விடிவு காலம் பிறந்தது போல் இன்று கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் மின்சாரம் நிறுத்தப்பட்டு புதிய மின் கம்பங்கள் மாற்றும் பணி தொடங்கியது.  பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டு புதிய வயர்களுடன் புதிய மின் கம்பங்கள் நிறுவப்பட்டது.   இதுவரை பயத்துடன் அப்பகுதியை கடந்து வந்த மக்கள் இனி பயமின்றி நடந்து செல்வார்கள் என்பது உறுதி.

மேலும் இந்த மின் கம்பம் பிர்ச்சினைப் பற்றி நம் கீழை  நியூஸ் இணையதளத்திலும் சமீபத்தில் வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடதக்கது.

https://keelainews.in/2017/03/25/sleeping-eb-pole-kilakarai-250317-07/

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!