17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏர்வாடியில் சாமியார் வேடத்தில் சுற்றிய வாலிபர் கைது?

ஏர்வாடியில் சாமியார் வேடத்தில் சுற்றிய வாலிபர் கைது?

எழுதியவர்: mohan September 17, 2019, 7:11 pm

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் காவி உடை அணிநது சுற்றி திரிந்தார். அவர் பொருட்கள் வாங்கிய ஒவ்வொரு கடையிலும் உருது, மராத்தி, ஹிந்தி மொழிகளில் பேசி வந்தார். இதனால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். விசாரணையில் மகாராஷ்டிரா , சங்லி, மிராஜ், குரு வார் பேட்டை, கிஷான் செளக் பகுதியைச் சேர்ந்த ஏ.வஹாப் ஏ.முனாப் பெபாரி 27 என தெரிந்தது. இவரிடமிருந்து பறிமுதல் செய்த ஆதார் அட்டையில் மகாராஷ்டிரா , சங்லி, மிராஜ், குரு வார் பேட்டை, கிஷான் செளக் ஏ.வஹாப் ஏ.முனாப் பெபாரி எனவும், பான் கார்டில் பெபாரி அப்துல் வஹாப் அப்துல் முனாப் அப்துல் முனாப் மூசா பெபாரி என ஆங்கிலத்தில் பெயரும், ஹிந்தியில் முகவரியும் அச்சிடப்பட்டு உள்ளது. முஸ்லிம் வாலிபரான இவர் காவி உடை அணிந்து கடந்த சில நாட்களாக தர்ஹா பகுதியில் சுற்றி திரிந்தது குறித்து ஏர்வாடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!