உசிலம்பட்டி அருகே தாதம்பட்டி கிராமத்தில் 1 வாரங்களுக்கு முன்பு காணாமல் போனவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தாதம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி மனைவி தெய்வராணி (26). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு காணாமல் போனதாகவும், இவர் மனநலம் குன்றியிருப்பவர் எனவும் கூறப்படுகிறது. மனைவி தெய்வராணி காணாமல் போனதாக கணவர் பாண்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் தாதம்பட்டி கிராமத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள பாழடைந்த கிணற்றில் பெண்சடலம் கிடப்பதாக உத்தப்பநாயக்கணூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது அது காணாமல் போன தெய்வராணியின் உடல் என்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். தெய்வராணியை யாரேனும் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்களா, இல்லையெனில் மனநலம் குன்றியவராக இருப்பதால் தானே குதித்து இறந்தாரா என பல்வேறு கோணங்களில் உத்தப்பநாயக்கணூர் போலீசார் விசாரனை மேற்கொண்டுவருகிறார்கள்.
உசிலம்பட்டி அருகே தாதம்பட்டி கிராமத்தில் 1 வாரங்களுக்கு முன்பு காணாமல் போனவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.
எழுதியவர்: mohan September 17, 2019, 6:33 pm




You must be logged in to post a comment.