17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சங்கரன்கோவிலை தனிமாவட்டமாக அறிவிக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

சங்கரன்கோவிலை தனிமாவட்டமாக அறிவிக்கக்கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

எழுதியவர்: mohan September 17, 2019, 5:27 pm

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் மற்றும் பொதுமக்களின் பேரணி 17.09.19 இன்று நடைபெற்றது.சமீபத்தில் நெல்லை மாவட்டத்திலிருந்து பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.

அதை தொடர்ந்து அங்கு புதிய மாவட்டமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்காசியை பிரித்தது போலவே சங்கரன்கோவிலையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வணிகர்கள்,பொதுமக்கள் ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சுழல் தற்போது காணப்படுகிறது.

இதில் சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி, வி.கே.புதூர் 4 தாலுகா தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கு கடைகள், காய்கறி சந்தை, 5 ஆயிரம் விசைத்தறி மூடப்பட்டு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் பல்வேறு வர்த்தக சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகை கடை, அனைத்து வியாபாரிகள் சங்கம் பங்கேற்றுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!