18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இடிந்து விழும் அபாய நிலையில் திண்டுக்கல் மாற்றுத்திறனாளிகள் அலுவலக சுவர்

இடிந்து விழும் அபாய நிலையில் திண்டுக்கல் மாற்றுத்திறனாளிகள் அலுவலக சுவர்

எழுதியவர்: mohan September 17, 2019, 4:51 pm

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஐம்பதாயிரத்தும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக தினசரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள்.குறிப்பாக வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ரயில் மற்றும் பேருந்து கட்டண சலுகை உள்ளிட்ட சான்றிதழ்களுக்காக நூற்றுக்கணக்கில் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் வெளிப்புறத்தில் உள்ள சுவர் முழுவதும் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.இந்த சுவரின் அருகில்தான் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் அமர்வார்கள். சுவரின் விரிசல் பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் சுவரை சரிசெய்ய இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வருகின்ற காலம் மழைக்காலம் என்பதால் விரிசல் ஏற்பட்ட சுவர் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாயம் உள்ளது.உயிர்பலி ஏற்பட்ட பின்னர் சுவரை சரிசெய்வதைவிட உடனடியாக போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் விரிசல் விழுந்த சுவரை அப்புறப்படுத்தி தரமான சுவர் அமைத்துத்தர வேண்டுமாறு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!