18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நகராட்சி » பிரச்சனை » கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி கூடுதல் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் செய்து சுகாதார ஆய்வு பணி…

கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி கூடுதல் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் செய்து சுகாதார ஆய்வு பணி…

எழுதியவர்: ஆசிரியர் April 11, 2017, 4:58 pm

கீழக்கரை சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி கூடுதல் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் செய்து சுகாதார ஆய்வு பணி தற்சமயம் கீழை நகரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கீழக்கரையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் வெகுவாக பரவி வருவது அனைவரும் அறிந்த விசயம்.  அதை தடுக்கும் முயற்சியில் நகராட்சியும் பல வகையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  அதே சமயம் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்பதை வலியுறுத்தி நகராட்சி ஆணையரும் சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்சமயம் நகராட்சி நிர்வாகத்தால் 40க்கும் மேற்ப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அவ்வாறு நியமிக்கப்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பணியாளர்கள்  பொதுமக்களை எவ்வாறு பொறுமையுடன் கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் ஒப்பந்தப் பணியாளர்கள் பொதுமக்களிடம் அவர்கள் சந்திக்க வந்திருப்பதின் நோக்கத்தை எவ்வாறு எடுத்துரைப்பது அவசியமில்லாமல் வீட்டில் தேங்கி உள்ள பொருட்களால் ஏற்படும் அசௌகரியங்களை எப்படி கையாள்வது .  அதே போல் பொதுமக்களிடம் நம்முடைய செயல்பாடுகள் மூலமே நல்லுறவை வளர்க்க முடியும் ஆகையால் நம்முடைய புன்வருவலுடன் கூடிய சேவையே அவர்களுடன் உறவை நல்லுறவை ஏற்படுத்த உதவும் அதன் மூலம் நம் பணிகளை திறம்பட செய்ய முடியும் என்பதை அறிவுருத்தினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!