தமிழக அளவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான துப்பாக்கி குண்டு சுடும் போட்டி கடந்த 11.09.2019-ம் தேதி முதல் 13.09.2019-ம் தேதி வரை சென்னை ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ படை துப்பாக்கி குண்டு சுடுதளத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக காவல்துறை சார்பாக மதுரை மாநகர் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் சந்திரமோகன், கலந்துகொண்டு 300 கஜம் ஸ்நாப் ரைபிள் பிரிவில் மாநில அளவில் தங்க பதக்கம் பெற்றார். அவரை இன்று மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.