திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 6, 7 வார்டுகளில் சாக்கடைகள் தூர்வாரி சாலையோரமாக போடப்படுகின்றன.அதை உடனடியாக அப்புறப்படுத்தாமல்
மீண்டும் சாக்கடை குள்ளேயே தள்ளப்படுவதால் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதனை நகராட்சி துப்புரவு பணியாளா்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றனா். இதனால், அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப் படுகின்றனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உதவுமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் நோய் பரவும் அபாயம்
எழுதியவர்: mohan September 17, 2019, 12:58 pm




You must be logged in to post a comment.