மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் பஞ்சாயத்தைச் சேர்ந்தது அம்பட்டையன்பட்டி கிராமம்.இக்கிராமத்திலுள்ள பாண்டியன் நகர் காலணியிலிருந்து தனியார் பள்ளி வேன் காலை பள்ளி செல்லும் குழந்தைகளை ஏற்றியுள்ளது.(வேன் உதவியாளர் இல்லை ).டிரைவர் ஒச்சாத்தேவர் வண்டியை எடுத்துள்ளார்.அப்பொழுது பள்ளி செல்லும் சிறுமிகளுடன் உடன்
வந்து அருகில் சாலையோரத்தில் விளையாடிக்கொண்டிருந்த மணிகன்டண் மகள் மனிஷா (2) வேன் சக்கரத்தில் சிக்கினார்.இதில் வேன் சக்கரம் ஏறி சிறுமி மனிஷா சம்பவஇடத்திலேயே பலியானார்.சம்பவமறிந்த சிந்துபட்டி போலிசார் ஆய்வாளர் சிவசக்தி தலைமையில் வழக்குப்பதிவு பள்ளி வேன் டிரைவர் ஒச்சாhத்தேவரை கைது செய்து சிறுமி உடலை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் உதவியாளர் இல்லாமல் பள்ளிவாகனத்தை இயக்கியது குறித்தும் வாகனம் முறையான அரசு அனுமதி பெற்றதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது தனியார் பள்ளி வாகனம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
எழுதியவர்: mohan September 17, 2019, 12:19 pm




You must be logged in to post a comment.