மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவண்டன்பட்டி ரோட்டில் அரசு உதவிபெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியர் மதன்பிரபு சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நல்லாசிரியர் விருது வழங்கினார். இந்நிலையில் விருதுபெற்றதற்கு நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி சார்பில் தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி வட்டார கல்வி அலுவலர் முத்தையா பங்கேற்றார். மேலும் இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளர் பொன்ரமேஷ், லையன்ஸ் கிளப் சங்க செயலாளர் வினுபிரபா, 58கிராம விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் உட்படநிர்வாகிகள், உசிலம்பட்டி பார்கவுன்சில் வழக்கறிஞர்கள் சங்கம், அரிமா சங்கம், அகிலஇந்திய பாரதிய பார்வர்ட் பிளாக் முருகன்ஜி, பள்ளி ஆசிரியர்கள், உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.







You must be logged in to post a comment.