தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தில் 200ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீமண்டு மாரியம்மன் கோவில் இருந்து வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலை புதுபிக்கும் பணி கடந்த 3ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. கோவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மகேந்திரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஜக்கசமுத்திரம்,ஜிட்டாண்டஅள்ளி,
கடந்த வியாழக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவனது அதிகாலை 4.30 மணிக்கு கலச ஆராதனை, பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்தி ஹோமம், பூர்ணாஹநிதி நடந்தது. இதனையடுத்து யாகசாலையிலிருந்து கும்பத்தை பட்டாச்சார்யகள் தங்கள் தலை மீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.அதனையொட்டி அம்மனுக்கு விசேஷ அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது .அதுசமயம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு பிரசாதம் பெற்று சென்றனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.




You must be logged in to post a comment.