17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதுரை – குப்பை கொட்டும் இடமாக மாறிய கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளம்.

மதுரை – குப்பை கொட்டும் இடமாக மாறிய கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளம்.

எழுதியவர்: mohan September 17, 2019, 10:10 am

மதுரை ஐயர்பங்களா திருப்பாலை கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள தெப்பக்குளத்தை சுற்றி நாள்தோறும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்,வயதானவர்கள்,பொதுமக்களும் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். நடை பயிற்சி செய்வோர்களின் முகம் சுளிக்கும் விதமாக இந்த பழமையான தெப்பக்குளம் இப்போது குப்பை பிளாஸ்டிக் கழிவுகள், ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் குப்பை தொட்டியாகவும். சிறுநீர், மலம் கழிக்கும் இடமாகவும். மது அருந்தும் இடமாகவும்,கயவா்களின் கூடாரமாகவும் விளங்குகிறது இதை சம்பத்தப்பட்ட அரசு அதிகாரிகள் இதை சரி செய்தால் மட்டுமே  இந்த குளங்களில் சேரும் மழை நீரும் சுத்தமான சுகாதரமான நிலத்தடி நீராகவும் காப்பாற்றப்படும்.  இப்போது பெய்துவரும் மழையால்  மழை நீரும் குப்பைகள் கலந்த கழிவு தெப்பத்தில் கலக்கின்றன. மேலும் பெண்கள் குழந்தைகள் மற்றும் காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது முகம் சுளிக்கும் வகையில் சில ஆண்கள் திறந்தவெளியில் கழிவறை செல்வதால் பெண்கள் தெருவில் நடக்க அச்சப்படுகிறார்கள்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பாலை பொது மக்கள்.. கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!