18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐநா சபை அதிகாரிகளிடம் மனு.

தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐநா சபை அதிகாரிகளிடம் மனு.

எழுதியவர்: mohan September 17, 2019, 9:53 am

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் இடையே 1983-ல் துவங்கிய உள்நாட்டுப் போரையடுத்து தமிழகத்திற்கு அகதிகள் வந்தனர். 26 ஆண்டு கால போர், 2009 மே மாதம் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் ராமேஸ்வரத்திற்கு அகதிகள் வருகை தொடர்ந்தது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் உள்பட 119 அகதிகள் முகாம்கள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இதில், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியிடங்களில் வசிக்கின்றனர். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை அகதிகள் சட்ட விரோதமாக இலங்கை செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. இதனையடுத்து அகதிகள் புனரமைப்பிற்கான ஐநா அமைப்பு அதிகாரிகள் மண்டபம் அகதிகள் முகாமில் ஆய்வு செய்தனர். தற்போது இங்கு 526 குடும்பங்களில் 1,598 பேரில் 45 குடும்பத்தைச் சேர்ந்த 146 பேர் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்து ஐநா., சபை அதிகாரிகளிடம் விருப்ப மனு அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!