18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவி நதியாவின் கடிதத்தை இணையத்தில் படித்து தபாலில் வாழ்த்து கடிதம் அனுப்பிய தமிழரசு

மாணவி நதியாவின் கடிதத்தை இணையத்தில் படித்து தபாலில் வாழ்த்து கடிதம் அனுப்பிய தமிழரசு

எழுதியவர்: mohan September 17, 2019, 9:29 am

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவி நதியா இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களுக்கு நம்பிக்கை கடிதம் எழுதியது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி வைரலானது.நதியாவின் ஊக்கமூட்டும் கடிதத்தை திரும்ப,திரும்ப பல முறை இணையத்தில் படித்து நெகிழ்ந்த சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சார்ந்த ஊராட்சி ஒன்றிய முன்னாள் உதவி இயக்குனர் தமிழரசு பள்ளி முகவரிக்கு மாணவியின் பெயருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.அந்த கடிதத்தில் , மாணவியின் கடிதத்தை திரும்ப,திரும்ப படித்து மனம் நெகிழ்ந்து கொண்டேன்.நமது வருங்கால இந்தியா உங்களைப்போன்ற இளம்தளிர்களால் சிறந்தோக்கப்போகிறது என்பதை என்னால் அறியமுடிகிறது.வாழ்த்துகிறேன் மகளே என்று கடிதம் அனுப்பி உள்ளார்.அன்னாரின் பாராட்டினை பெற்ற நதியாவுக்கும்,பள்ளி ஆசிரியர்,தலைமை ஆசிரியருக்கும்,மாணவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி.வாழ்த்தினை முயற்சி எடுத்து ஸ்டாம்ப் ஒட்டி கடிதம் எழுதி அனுப்பி உள்ள தமிழரசுக்கு பள்ளி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது .

செய்தி வி காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!