18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ஒரே நாளில் இரண்டு பேர் தூக்கில் தொங்கி தற்கொலை

மதுரையில் ஒரே நாளில் இரண்டு பேர் தூக்கில் தொங்கி தற்கொலை

எழுதியவர்: mohan September 16, 2019, 7:54 pm

ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வீரபஞ்சன் இவர் மதுரையில் உள்ள தனியார் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார் .இன்று 16.09.19 காலை வீட்டில்  தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த ஒத்தக்கடை காவல்துறையினர் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு சம்பவம் கல்லூரி மாணவர் சதீஷ்குமார் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். வீட்டில்  தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஒரேநேரத்தில் இருவர் தூக்கில் தொங்கியது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் தற்கொலை செய்து கொண்ட இருவரும் மற்றும் ஆதரவற்ற நிலையில் இருந்த மற்றொருஉடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு அவருடைய கண்கள் தானமாக வழங்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு நேதாஜி ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஹரிகிருஷ்ணன்  மூலமாக கண்தானம் பெறப்பட்டு பின் அவர்கள் உடல் தத்த நெறியில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!