திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் ஆய்வு மன்றமும் பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து “இலக்கியங்களில் பசுமை அரண்கள்”என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம்” 16.09.19 இன்று நடைபெற்றது.ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மைதிலி தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் ஆய்வு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.சிவசங்கரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பே.இராஜேந்திரன் கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.திருநெல்வேலி அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளிதுவக்கஉரையாற்றினார்.இந்நிகழ்வில் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முனைவர் பி.ஜோதிமணி வெளியிட்டார்.
நூலின் முதல் படியை ராணி அண்ணா கல்லூரியின் முதல்வர் முனைவர் மைதிலி மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் இராஜேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.கருத்தரங்கில் முனைவர் இரா.சிவசங்கரி, முனைவர் இரா.உமாதேவி மற்றும் அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி ஆகியோருக்கு”பசுமை ஆர்வலர்”விருதுகளையும், கட்டுரைகள் சமர்பித்த பேராசிரியர்கள்,ஆய்வு மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முனைவர் பி.ஜோதிமணி அவர்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சின்னத்தாய்,விலங்கியல் துறை பேராசிரியர் வே.முத்தமிழன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.பேராசிரியர்முனைவர் இரா.உமாதேவிதொகுத்துவழங்கினார்.பேராசிரியர் முனைவர் சகாயமேரி நன்றி உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்க செயலாளர் வழக்கறிஞர் பிரபாகர் உட்பட கல்லூரி மாணவிகளும் பேராசிரியர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.