திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவருக்கு மேல்பென்னாத்தூர் கிராமத்தில் சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில் அதே ஊரைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், கிருஷ்ணன் மற்றும் மார்க்கண்டேயன் ஆகிய 3 சகோதரர்கள் 50 செண்ட் நிலத்தை
ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி பாய்ச்சல் காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனமுடைந்த அவர் இன்று16.09.19 காலை மனைவி, நவநீதம், தாய் சுந்தரி ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வந்து மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதைக் கண்ட காவல்துறையினர் விரைந்து வந்து தீக்குளிக்க முயன்ற பூமிநாதனிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றி அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.முறைப்படி சலான் கட்டிய அளந்து காணிக்கல் நடப்பட்ட நிலத்தை எதிரிகள் வந்து மிரட்டி காணிக்கல்லை பிடுங்கி எறிந்துவிட்டு எங்களை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர் தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளார்.




You must be logged in to post a comment.